உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தென்மாநில ஆடவர் கபடி போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்

தென்மாநில ஆடவர் கபடி போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்

சென்னை, கர்நாடக மாநிலத்தில் நடந்த தென்மாநில அளவிலான ஆடவர் கபடி போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. ராணி சன்னம்மா பல்கலைக்கழகம் சார்பில், ஆடவருக்கான தென்மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டி, கர்நாடகாவின் பெலகாவியில் நடந்தது. இதில் தென்மாநிலங்களிலிருந்து, 130க்கும் அதிகமான அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட் கம் லீக்' முறையில் போட்டிகள் நடந்தன. நாக் அவுட் சுற்றின் முடிவில் நடந்த காலிறுதி போட்டியில், ஆந்திராவின் விக்ரம சிம்ஹபூரி பல்கலையை எதிர்த்து மோதிய எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக அணி, 28 - 5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று, லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து, மைசூர் பல்கலை - எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகளுக்கு இடையிலான முதல் லீக் சுற்று போட்டி, 32 - 32 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் களமிறங்கிய எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, விநாயகா மிஷன் அணியை எதிர்கொண்டது. இதில், எஸ்.ஆர்.எம்., அணி 41 - 35 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. போட்டிகள் முடிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி 2 வெற்றி, 1 டிரா என, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதோடு, உத்தரப் பிரதேசத்தில் வரும் 13 - 17ம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய ஆடவர் கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை