மேலும் செய்திகள்
மாநில செஸ் போட்டி செங்கை சிறுவர்கள் அசத்தல்
22-Sep-2024
சென்னை, செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் ஆதரவுடன் ஜி.எம்.செஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான செஸ் போட்டிகள், தாம்பரத்தில் உள்ள சான் அகாடமி பள்ளியில் நடந்தது. இருபாலருக்குமான இப்போட்டிகள், 8, 10, 13, 25 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் நடந்தன.இதில், சென்னை, திருவள்ளூர், வேலுார், திருச்சி, திருநெல்வேலி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.இதில் எட்டு வயது பிரிவில், சிறுவர்களில் செங்கல்பட்டு நிதிஷ் மற்றும் சிறுமியரில் பவின்ஷா; 10 வயது பிரிவில் செங்கல்பட்டு சாய்சரண் மற்றும் ரித்வியா; 13 வயது பிரிவில் செங்கல்பட்டு அபினவ் மற்றும் சென்னை ஷர்வினி, 25 வயது பிரிவில் சென்னையைச் சேர்ந்த தீபக்ராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, எம்.ஐ.டி., கல்லுாரி இயந்திரவியல் தலைவர் அண்ணாமலை, பள்ளி நிர்வாகி மோனிகா, செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
22-Sep-2024