உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 40 அடி பாலத்தில் இருந்து விழுந்து மாணவர் பலி

40 அடி பாலத்தில் இருந்து விழுந்து மாணவர் பலி

மணலி, சின்னசேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 22; எம்.ஜி.ஆர்., மருத்துவ கல்லுாரி, பிசியோதெரபி நான்காம் ஆண்டு மாணவர்.கல்லுாரி முடித்து, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த நண்பர் நிதிஷ்குமாருடன் கே.டிஎம்., டியூக் பைக்கில், வீடு திரும்பினார். பைக்கை நிதிஷ்குமார் ஓட்ட, விக்னேஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.புழல் அருகே மேம்பாலத்தில் வந்தபோது, வளைவில் திரும்புகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பைக், மேம்பால தடுப்பு சுவரில் மோதியது. இதில், மேம்பாலத்தின் 40 அடி உயரத்தில் இருந்து, இருவரும் கீழே விழுந்தனர். இதில் விக்னேஷ் பலத்த காயமடைந்தார். உடனடியாக புழல் நகர்ப்புற சமுதாய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. நிதிஷ்குமார் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ