உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி மோதி மாணவர் பலி மாணவி படுகாயம்

லாரி மோதி மாணவர் பலி மாணவி படுகாயம்

புழல்,தண்டையார்பேட்டை நேரு நகரைச் சேர்ந்தவர் சாரதி, 17; தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாமாண்டு படித்தார். இவரும், சென்னையிலுள்ள பல்கலை ஒன்றில் பி.காம்., பயிலும் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியும், நேற்று மதியம் 'பைக்'கில் சென்றுள்ளனர். பைக்கை சாரதி ஓட்ட, மாணவி பின்னால் அமர்ந்து வந்துள்ளார்.புழல் புறவழிச்சாலையில், சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி ஒன்று, பைக் மீது உரசியுள்ளது. இதில் தடுமாறிய சாரதி கீழே விழ, லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.பின்னால் அமர்ந்து வந்த மாணவி, தலையில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர் மாணவியை மீட்டு,ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சாரதியின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து ஏற்படுத்தி தப்பிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி