மேலும் செய்திகள்
மாநில விளையாட்டு போட்டி: பள்ளி மாணவர்கள் தேர்வு
13-Sep-2024
சென்னை:முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், ஐந்து பிரிவின் கீழ் தமிழகம் முழுதும் நடந்து வருகின்றன. இதில், சென்னை மாவட்ட பள்ளிகள் பிரிவுக்கான குத்துச்சண்டை போட்டி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில் 70 கி., பிரிவில், ராயப்பேட்டை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர் நித்தின் பங்கேற்றார். முதல் சுற்றில் தர்ஷன் குமார், இரண்டாம் சுற்றில் சோலமன் ஆகியோரை வீழ்த்திய நித்தின் காலிறுதியில் செயின்ட் ஜோசப் பள்ளி வீரர் கார்த்திகேயனை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.அரையிறுதியில் டான்பாஸ்கோ பள்ளி வீரர் லிட்டர்ஷனை வீழ்த்திய நித்தின், பரபரப்பான இறுதிப் போட்டியில் கே.சி.சங்கரா பள்ளி தீபக்கை தோல்வியுறச் செய்து, சென்னை மாவட்ட சாம்பியன் ஆனார்.இப்போட்டியில் வென்றதன் வாயிலாக, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க நித்தின் தகுதி பெற்றார். வெற்றி பெற்ற நித்தினை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
13-Sep-2024