மேலும் செய்திகள்
சுற்றுலா வந்தவரின் பைக் தீ பிடித்து எரிந்தது
23-Dec-2025
சென்னை: அண்ணாநகர் அடுத்த ஷெனாய் நகர், பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் கவின், 22; சட்டக்கல்லுாரி மாணவர். இவர், நேற்று மாலை ராயல் என்பீல்டு புல்லட் ஓட்டிக் கொண்டு, மயிலாப்பூர் கல்வி வாரு தெரு வழியாக சென்றார். அப்போது, புல்லட்டின் இன்ஜினில் இருந்து கரும்புகை வெளியானது. உடனே வாகனத்தை சாலையோரம் நிறுத்தி பார்த்தபோது, தீ பற்றி எரிந்தது. சம்பவம் அறிந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், அதிர்ஷ்டவசமாக மாணவர் காயமின்றி தப்பினார். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Dec-2025