மேலும் செய்திகள்
இடிந்து கிடக்கும் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி
05-Sep-2024
கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நேற்று காலை, பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்தது. இதனால் மாணவர்கள், தங்களது புத்தக பைகளை வகுப்பறைக்கு வெளியே வைத்திருந்தனர்.பள்ளி கட்டடத்திற்கும், சுற்றுச்சுவருக்கும் இடையே உள்ள புதரில் இருந்து நல்லப்பாம்பு ஒன்று, மாணவர்களின் புத்தக பைகளுக்குள் நுழைந்துள்ளது. இதைக் கண்ட மாணவர்கள் அலறியடித்து ஓடினர். கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கு வந்து, புத்தக பையில் பதுங்கி இருந்த நல்லப்பாம்பை பிடித்தனர்.சற்று நேரத்தில், கட்டடத்தை ஒட்டியிருந்த புதரில் இருந்து வெளியேறிய, சிறிய கொம்பேரி மூக்கன் பாம்பு ஒன்றையும் அவர்கள் பிடித்தனர். இரு பாம்புகளையும் பத்திரமாக, ஏடூர் காப்புக்காட்டில் விடுவித்தனர்.
05-Sep-2024