உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேனாம்பேட்டையில் சூரசம்ஹாரம்

தேனாம்பேட்டையில் சூரசம்ஹாரம்

சென்னை:நவராத்திரியின் கடைசி நாளை முன்னிட்டு பெண்களின் திருமண வாழ்வு மற்றும் குழந்தைகளின் நலன் உள்ளிட்டவை சிறக்க நேற்று முன்தினம் இரவு, சென்னை தேனாம்பேட்டையில் சூரசம்ஹார நிகழ்வு நடந்தது. இதில் காமராஜர் தெருவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் விரதமிருந்து, அம்மனை வழிபட்டனர். இதுகுறித்து, காமராஜர் தெரு பொதுமக்கள் கூறியதாவது:நவராத்திரியை முன்னிட்டு, கொலு வைத்து அம்மனை வழிபட்டு, இறுதி நாளில் சூரசம்ஹாரம் நடத்துவது இப்பகுதி மக்களின் வழக்கம். நவராத்திரி என்பது பெண் தெய்வங்களை மையமாகக் கொண்டு நடைபெறும் விழா எனவே, இந்த சூரசம்ஹார நிகழ்விலும் பெண்கள் மற்றும் குழந்தைகளே முதன்மை வகிப்பர். இதை தொடர்ந்து 25 வருடங்களுக்கு மேலாகச் செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ