நீச்சல், டைவிங் சாம்பியன்ஷிப் துவக்கம்
சென்னை,அகில இந்திய பல்கலைகள் கூட்டமைப்பு மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும், தென்மேற்கு மண்டல பல்கலைகளுக்கு இடையேயான நீச்சல் மற்றும் டைவிங் சாம்பியன்ஷிப் போட்டிகள், இன்று காலை, 7:00 மணிக்கு துவங்குகிறது.போட்டிகள், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில் உள்ள நீச்சல் குளத்தில் நடக்கிறது. இருபாலருக்கான போட்டியில், 216 பல்கலை அணிகள் எதிர்கொள்கின்றன. இப்போட்டி, 23ம் தேதி வரை நடக்கிறது.அதைத்தொடர்ந்து, அகில இந்திய பல்கலைக்கு இடையிலான நீச்சல் மற்றும் டைவிங் போட்டி, அதேவளாகத்தில், 25 முதல் 27ம் தேதிகள் வரை நடக்கிறது. இப்போட்டியில், 500க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்த உள்ளன.