உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகர் தி.மு.க., கோட்டை எம்.எல்.ஏ., பெருமிதம்

தி.நகர் தி.மு.க., கோட்டை எம்.எல்.ஏ., பெருமிதம்

தி.நகர்:சென்னை தென்மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு பகுதி, 141வது வட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, 'ஏன் வேண்டும் தி.மு.க.,' என்ற தலைப்பில், விளக்க உரை கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது.மாவட்ட செயலரும், மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுமான வேலு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில், 141வது வார்டு கவுன்சிலர் ராஜா அன்பழகன் பேசுகையில், ''தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளது. எனவே, இன்னும் வேகமாக உழைக்க வேண்டும்,'' என்றார்.தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசுகையில், ''இந்த வட்டம், தி.மு.க., கோட்டையாக மாறி உள்ளது. பெண்கள் அதிகம் உள்ள வட்டம். அதனால் நீங்கள், சமையலறை வரை சென்று எளிதாக ஓட்டு கேட்க முடியும். தேர்தலை சந்தித்து முதல்வரானாவர் ஸ்டாலின். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தவழ்ந்து தலைவரானவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி