டேக் டெவலப்பர்ஸ் நிறுவன சாட்டிலைட் அலுவலகம் திறப்பு
சென்னை: 'டேக் டெவலப்பர்ஸ்' கட்டுமான நிறுவனத்தின், 'சாட்டிலைட்' அலுவலகம், செம்மஞ்சேரியில், நேற்று திறக்கப்பட்டது. கட்டுமான நிறுவனமான, 'டேக் டெவலப்பர்ஸ்' நிறுவனம், சென்னை மற்றும் கோவையில், 50 லட்சம் சதுர அடி வரை, வீட்டு மனைகளை கட்டி விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் சார்பில், சென்னை, ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், அந்நிறுவன, 'சாட்டிலைட்' அலுவலகம், செம்மஞ்சேரியில் நேற்று திறக்கப்பட்டது. 'யூபி' குழுமத்தின் நிறுவனர் கவுரவ்குமார், சாட்டிலைட் அலுவலகத்தை திறந்து வைத்தார். டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கான தனி இதழை வெளியிட்டு, சென்னையின் முதல் ஆங்கில பாணி குடியிருப்பான, 'கேம்பிரிட்ஜ்' கட்டுமான திட்டங்களை பார்வையிட்டார். டேக் டெவலப்பர்ஸ் நிறுவனர் சதீஷ்குமார் சந்தானம் கூறுகையில், ''கடந்த, 2006ம் ஆண்டு மூன்று நபர்களுடன் சிறிதாக துவக்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது, 850 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ''வாடிக்கையாளர்களின் வசதி, தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே, 10,000 சதுர அடியில் இந்த சாட்டிலைட் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது,'' என்றார். இந்நிகழ்ச்சியில், டேக் டெவலப்பர்ஸ் இயக்குநர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.