மேலும் செய்திகள்
காங்கிரசில் சீனியர்கள் போர்க்கொடி
01-May-2026 | 1
சென்னை: சென்னை துறைமுகத்தின் புதிய தலைவராக, சச்சின் சரத்சந்திர குர்வே நேற்று பொறுப்பேற்று கொண்டார். சென்னை துறைமுகத்தின் தலைவராக இருந்த சுனில் பாலிவால், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, உத்தரகண்ட் ஐ.ஏ.எஸ்., கேடரை சேர்ந்த சச்சின் சரத்சந்திர குர்வே, சென்னை துறைமுகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவர், நாக்பூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு துறைகளின் செயலராக பணியாற்றியுள்ளார்.
01-May-2026 | 1