தாம்பரம் - விழுப்புரம் ரயில் சேவை மாற்றம்
சென்னை, சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் மயிலம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், 'மெமு' பயணியர் ரயில், சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அந்தவகையில், தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்திற்கு, இன்றும் நாளையும் காலை 9:45 மணிக்கு புறப்படும் 'மெமு' பயணியர் ரயில், திண்டிவனம் - விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.விழுப்புரம் - சென்னை கடற்கரைக்கு இன்றும் நாளையும் மதியம் 1:40 மணிக்கு புறப்பட வேண்டிய 'மெமு' பயணியர் ரயில், விழுப்புரம் - திண்டிவனம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.