ஆசிய நீச்சல் போட்டி தமிழகத்திற்கு 5 பதக்கம்
சென்னை, ஆசிய அக்வாட்டிக் மற்றும் இந்திய நீச்சல் சங்கம் சார்பில் நடத்தப்படும், 11வது ஆசிய அக்வாட்டிக் சாம்பியன்ஷிப் எனும் நீர்விளையாட்டு போட்டிகள், குஜராத் மாநிலத்தின் ஆமதாபாதில் உள்ள வீர்சாவர்க்கர் விளையாட்டு வளாக நீச்சல் குளத்தில் நடந்தன. இந்தியா, சீனா உட்பட 12 ஆசிய நாடுகள் பங்கேற்றன. இந்திய அணியில் , தமிழகத்தைச் சேர்ந்த நான்கு ஆண்கள், இரு பெண்கள் பங்கேற்றனர் . இதில், ஆண்கள் பிரிவில் நடந்த 50 மீட்டர் 'பட்டர்பிளை' சுற்றில், நெல்லை வீரர் பெனடிக்டன் ரோகித் போட்டித் துாரத்தை 23.89 விநாடிகளில் கடந்து, வெள்ளி பதக்கம் வென்றார். அடுத்து நடந்த ஆண்களுக்கான 4x100 மீட்டர் 'ப்ரீ ஸ்டைல் ரிலே' மற்றும் 4x100 மீட்டர் 'மெட்லி ரிலே' ஆகிய இரு போட்டிகளில், பெனடிக்டன் ரோகித் மற்றும் சென்னையின் ஜோசுவா தாமஸ் ஆகியோர், தலா ஒரு வெண்கலம் வென்று அசத்தினர்.