மெத் ஆம்பெட்டமைன் விற்ற வாலிபர்கள் சிக்கினர்
சென்னை:சென்னை, ஐஸ்ஹவுஸ் பகுதியில் மர்ம நபர்கள் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, ஏ.என்.யு.ஐ., எனப்படும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் 2 கிராம் மெத் ஆம்பெட்டமைனுடன், வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திகேயன், 27; சந்தோஷ், 20 ஆகியோரை பிடித்துள்ளனர். அவர்களது கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.