கோவில் உண்டியலில் திருடியவர் சிக்கினார்
புதுவண்ணாரப்பேட்டை:புதுவண்ணாரப்பேட்டையில் கோவில் உண்டியல் உடைத்து திருடியவர் கைது செய்யப்பட்டார். புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஞானவேல், 48. இவர், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவிலில் 25 ஆண்டுகளாக பொறுப்பாளராக இருந்து வருகிறார். கடந்த 9ம் தேதி காலை கோவிலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருடிச் சென்றது தெரியவந்தது. புதுவண்ணாரப்பேட்டை போலீசார், திருட்டில் ஈடுபட்ட திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்த வடிவேல், 34, என்பவரை நேற்று கைது செய்தனர்.