உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கோவில் உண்டியல் திருடியோர் கைது

 கோவில் உண்டியல் திருடியோர் கைது

அம்பத்துார்: அம்பத்துார், மேனாம்பேடு, கருக்கு பிரதான சாலையில், ஸ்ரீ சந்தான சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியல் மற்றும் வெண்கல பூஜை பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து, புதுார் போலீசார் விசாரித்தனர். இதில், பாடி புதுநகரைச் சேர்ந்த சரவணன், 38, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின், 42, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்