உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழவேற்காடு கடலில் குளித்த சிறுவன் மாயம்

பழவேற்காடு கடலில் குளித்த சிறுவன் மாயம்

பழவேற்காடு, செங்குன்றம் அடுத்த தீர்த்தகிரையம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 40. இவரது மகன் திலக் பிரசன்னா, 16. இவர், சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.சுரேஷ்குமார் குடும்பத்தினருடன், நேற்று பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். லைட் ஹவுஸ்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில், திலக் பிரசன்னா விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, அலையில் சிக்கிய சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மீனவர்கள் அங்கு விரைந்துசெல்வதற்குள், திலக் பிரசன்னா நீரில் மூழ்கி மாயமானார். திருப்பாலைவனம் போலீசார், மீனவர்கள் உதவியுடன் சிறுவனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை