உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹவாலா பணத்தை கொள்ளையடித்தவர் காரில் கஞ்சா கடத்திய போது சிக்கினர்

ஹவாலா பணத்தை கொள்ளையடித்தவர் காரில் கஞ்சா கடத்திய போது சிக்கினர்

கொடுங்கையூர்:சென்னை, கொடுங்கையூர், எம்.ஆர்.நகர் சந்திப்பு அருகே புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால், அவர்களது பையை சோதனையிட்டனர். அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.விசாரணையில், வேலுார் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, பேரனாம்பேட், லால் மசூதி தெருவை சேர்ந்த இம்ரான், 41 என்பதும், இவர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 22 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.மேலும், கொடுங்கையூர், தென்றல் நகரை சேர்ந்த கருணாகரன், 39, மணலி, பெரியார் நகரை சேர்ந்த நுார் முகமது, 38, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த பாட்ஷா, 29 ஆகியேர் மீதும் பல்வேறு வழக்குகள் இருந்தது தெரியவந்தது. நால்வரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில், இம்ரான் மீது யானைகவுனி காவல் நிலையத்தில், போலீஸ் போல் நடித்து, ஹவாலா பணத்தை கொள்ளையடித்த வழக்கும் உள்ளது.கடந்த பிப்., 2ம் தேதி, ஆந்திராவை சேர்ந்த நகை வியாபாரி சுப்புராவ், தனது மேலாளர் ரகுமான் என்பவருடன், நகை வாங்குவதற்காக 1.4 கோடி ரூபாயுடன் யானை கவுனி பகுதிக்கு ஆட்டோவில் வந்த போது லத்தி, கைவிலங்குடன் காரில் வந்து இறங்கிய இம்ராம் மற்றும் அவரது கூட்டாளிகள், போலீஸ் போல் நடித்து அவர்களிடம் இருந்த 1.4 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர். இவர்கள், குருவி, ஹவாலா முறைகேட்டில் ஈடுபடும் நபர்களை குறிவைத்து ஸ்கெட்ச் போட்டு, போலீஸ் போல் நடித்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இம்ரானிடம் இருந்து போலீஸ் தொப்பிகள், போலி கார் நம்பர் பிளேட்டுகள் மற்றும் கஞ்சா உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ