உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஞ்சியில் மீட்கப்பட்ட ஆண் சடலம் தந்தையே அடித்து கொன்றது அம்பலம்

காஞ்சியில் மீட்கப்பட்ட ஆண் சடலம் தந்தையே அடித்து கொன்றது அம்பலம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கம் கிராம பொது குளத்தில், மிதந்த ஆண் சடலத்தை, பாலுசெட்டிசத்திரம் போலீசார், நேற்று முன்தினம் மீட்டு விசாரித்தனர்.மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்தன; இடுப்பில் கல் கட்டப்பட்டு சடலம் வீசப்பட்டிருந்ததும் தெரிந்தது.விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி, 35, என்பது தெரிந்தது.அவரது தந்தை காத்தவராயன், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்.இதில், காத்தவராயன், 60, மற்றும் உறவினர் ராஜேஷ், 40, ஆகிய இருவரும் முனுசாமியை கட்டையால் அடித்து கொலை செய்து, கல்லை கட்டி குளத்தில் வீசியது தெரிந்தது. போலீசார், இருவரையும் நேற்று கைது செய்தனர்.இக்கொலை குறித்து போலீசார் கூறியதாவது:மது போதைக்கு அடிமையான முனுசாமி, வீட்டில் அனைவரிடமும் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி பிரிந்து, தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.கடந்த 17ம் தேதி, மது போதையில் வீட்டிற்கு வந்த முனுசாமி, தாய், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதில் அதிருப்தியடைந்த காத்தவராயன், கட்டையால் மகன் முனுசாமியை தலை உள்ளிட்ட இடங்களில் கடுமையாக தாக்கி கொலை செய்து உள்ளார்.தன் மனைவியின் சகோதரர் ராஜேஷ் என்பவரின் துணையுடன் சடலத்தை குளத்தில் வீசியுள்ளார்.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை