மேலும் செய்திகள்
பெண் படுகொலை கணவன் சீரியஸ்
20-Sep-2024
கூடுவாஞ்சேரி, செப். 21-கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் சந்தனகுமார், 46; மாடம்பாக்கம் பகுதியில் 'பர்னிச்சர்' கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி, 40.நேற்று முன்தினம், தம்பதி இருவரும் பலத்த காயங்களுடன், வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். கல்லுாரி சென்று திரும்பிய அவர்களது மகள் காவியா, ரத்தக் காயங்களுடன் கிடந்த பெற்றோரை, மருத்துவமனையில் சேர்த்தார்.அங்கு மருத்துவ பரிசோதனையில் பரமேஸ்வரி இறந்தது தெரிய வந்தது. சந்தனகுமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து சந்தனகுமாரிடம் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்தனர்.இதில், அவரே தன் மனைவியை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து போலீசார் கூறியதாவது:சந்தனகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம், இருவருக்கும் தகராறு முற்றியதில், கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.அப்போது, காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து, ஆத்திரத்தில் மனைவியின் கழுத்து மற்றும் வயிற்றில் குத்தி, சந்தனகுமார் கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
20-Sep-2024