உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோவில் வீலிங் ஓட்டுனர் சிக்கினார்

ஆட்டோவில் வீலிங் ஓட்டுனர் சிக்கினார்

போரூர், போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி, ஆபத்தான முறையில், சிலர் ஆட்டோ சாகசத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. இது குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்தனர்.இதில், அய்யப்பன்தாங்கலில் ஒருவரின் இறுதி ஊர்வலம் நடந்தபோது, போக்குவரத்தை நிறுத்தி அய்யப்பன்தாங்கல், கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகரைச் சேர்ந்த வேலு, 42, என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து சாகசத்தில் ஈடுபட்டது தெரிந்தது.இதையடுத்து, பொது இடத்தில் அதிவேகமாகவும், ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் ஆட்டோ ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட வேலுவை, போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை