உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்

காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்

ஓட்டேரி, ஓட்டேரியில் நாளை நடக்க இருந்த காதலனின் திருமணத்தை, இளம்பெண் தடுத்து நிறுத்தினார். ஓட்டேரியை சேர்ந்த கல்லுாரி மாணவியான 19 வயது இளம்பெண். இவரும், வீட்டருகே வசிக்கும் விஷ்வா என்கிற கலைச்செல்வன், 32, என்பவரும், மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கலைச்செல்வனுக்கு அவரது வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் நாளை நடக்க இருந்த நிலையில், இதையறிந்த அப்பெண், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின்படி கலைச்செல்வனிடம் விசாரித்த போலீசார், அவர் காதலியை திருமணம் செய்ய முடியாது என, திட்டவட்டமாக கூறினார். போலீசார் கலைச்செல்வனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, திருமணம் நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
ஆக 27, 2025 06:14

வயசு வித்தியாசத்தை பாரும்மா , அவனோடு அதிக நாள் வாழ்வது உனக்கு தான் கடினம்


Arul. K
ஆக 27, 2025 13:09

அவனோடு வாழ்ந்த நாட்கள்தான் mukkiyam


நிக்கோல்தாம்சன்
ஆக 28, 2025 02:30

இதுதான் காதலுக்கு கண்ணில்லை என்பதா


Natchimuthu Chithiraisamy
ஆக 29, 2025 12:16

வித்தியாசம் தெரிந்து தான் காதல் வந்தது. குறைந்த வயதுடைய பெண்ணே தடுக்கிறார் திருமணத்தை, வாழ்வதும் அவள் தான். ஏன் காதல் செய்யும் போது காமம் கொள்ள வேண்டும். பெண்களே புரிந்து கொள்ளுங்கள்.


முக்கிய வீடியோ