உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து  திருநின்றவூர் மக்கள் எதிர்பார்ப்பு

கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து  திருநின்றவூர் மக்கள் எதிர்பார்ப்பு

திருநின்றவூர்:திருநின்றவூரில் இருந்து சென்னை பிராட்வே செல்ல, 71 -இ என்ற தடம் எண்ணில், அரசு பேருந்து இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில், 16 விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன. பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணியை காரணம் காட்டி, ஐந்து ஆண்டுகளாக, நான்கு விரைவு மற்றும் ஒரு சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவையும், ஒரு மணி நேரத்திற்கு ஒன்றுதான் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 25ம் தேதி, பட்டாபிராம் ரயில்வே மேம்பாலத்தின் ஒருவழிப்பாதை, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இருப்பினும், மீதமுள்ள 11 பேருந்துகள், பட்டாபிராம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், சென்னைக்கு செல்ல, இந்த பேருந்தை நம்பியுள்ள, திருநின்றவூர், அதை சுற்றியுள்ள 32 கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். 'திருநின்றவூரில் இருந்து வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக, தாம்பரம், கிளாம்பாக்கத்திற்கு அரசு பேருந்து இயக்க வேண்டும். ...............................அண்ணா சதுக்கம் வரை செல்லும் தடம் எண் : 40 ஏ, 40 எச் பேருந்துகளை திருநின்றவூர் வரை நீடிக்க வேண்டும். திருநின்றவூரில் இருந்து தி.நகர் வரை செல்லும், 154 ஏ பேருந்தை மீண்டும் இயக்க எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ