உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: மூவர் கைது 

 ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: மூவர் கைது 

அம்பத்தூர்:ஒரகடம், அம்மன் தெருவில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஆவடி, சிந்து நகரைச் சேர்ந்த மகேஷ், 23 மற்றும் பட்டாபிராம், அண்ணா நகரைச் சேர்ந்த அஜய்குமார், 19 ; ஆகியோரை பிடித்து சோதனை செய்த போது அவர்களிடம் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அம்பத்தூர் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர். புதூர், சண்முகபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நரசிம்மன், 29 ; என்பவரை பிடித்து விசாரித்த போது, அவரிடம் 1.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7.300 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. புதூர் போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை