வாலிபரை தாக்கிய மூவர் கைது
ராமாபுரம், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதாப்குமார், 37; முகலிவாக்கத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் பொறுப்பாளர்.இவர், சத்யநாராயணன் என்பவரின், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வந்த, விபூதி மகாரானா என்பவரை, தன் நிறுவனத்தில் பணிக்கு சேர்த்தார். இதனால், சத்யநாராயணனிற்கும், பிரதாப்குமாருக்கு தகராறு ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த 22ம் தேதி இரவு, பிரதாப்குமார் பணி முடிந்து, முகலிவாக்கம் பரங்கிமலை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அங்கு வந்த சத்யநாராயணன், அவரது இரு நண்பர்கள், பீர்பாட்டிலை உடைத்து பிரதாப்குமாரின் வயிற்றில் குத்தி, தப்பிச் சென்றனர். ராமாபுரம் போலீசார் விசாரித்து, ஒடிசாவைச் சேர்ந்த சத்யநாராயணன், 30, ராஜேஷ்குமார், 26, பராக் ஜோதி, 32, ஆகிய மூவரை, நேற்று கைது செய்தனர்.