மேலும் செய்திகள்
டூ - வீலர் திருடிய இருவர் கைது
30-Mar-2025
சென்னை :திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன், 58. இவர், ஐந்து ஆண்டுகளாக சென்னை திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் அருகே தங்கி, சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த 15ம் தேதி, கஜபதி தெருவில் நின்றவாறு, சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது, ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், அவர் கையில் வைத்திருந்த, 8,000 ரூபாயை பறித்து தப்பினர்.ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்கு பதிந்து, பணம் பறித்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஜி, 20, ஆகாஷ், 20, அபிஷேக், 26 ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,750 ரூபாயையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட விஜி மீது, ஏழு வழக்குகளும், அபிஷேக் மீது, இரண்டு வழக்குகளும் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
30-Mar-2025