மேலும் செய்திகள்
காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
26-Oct-2024
புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் பரத், 36. இவர், தீபாவளியன்று, புதுவண்ணாரப்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள டிபன் கடைக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த மூவருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.அப்போது, 'அறிமுகம்இல்லாத எங்களுக்கு ஏன் தீபாவளி வாழ்த்து கூறினாய்?' எனக்கேட்டு, அங்கு மதுபோதையில் இருந்த மூவரும், வீண் தகராறு செய்தனர். மேலும், கத்தியால் பரத்தை குத்தி விட்டு சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பரத்தை, அங்கிருந்தோர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து விசாரித்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், போதை ஆசாமிகளான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த திவாகர், 20, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகேஷ், 19, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூவரை, நேற்று கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.சிறுவனை சீர்த்திருத்தப் பள்ளியிலும், திவாகர், முகேஷ் ஆகியோரை சிறையில் அடைத்தனர்.
26-Oct-2024