மேலும் செய்திகள்
வளசரவாக்கத்தில் சாலை பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
14-Apr-2025
மனைவி கண் முன்னே நடந்த பயங்கர சம்பவம்
20-Apr-2025
வளசரவாக்கம்:போரூர் அடுத்த காரம்பாக்கம், காவேரி நகரைச் சேர்ந்தவர் ஜெகன், 21. இவர், அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிகிறார்.கடந்த 9ம் தேதி இரவு பணி முடித்து வீட்டிற்கு நடந்து சென்றார். காரம்பாக்கம் பிராமணர் தெரு வழியாக சென்றபோது, 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தில் வந்த அவருக்கு அறிமுகமான சுரேஷ் மற்றும் இரு நபர்கள், ஜெகனை வழிமறித்து பணம் கேட்டனர்.ஜெகன் பணம் தர மறுக்கவே, மூவரும் சேர்ந்து அவரை தாக்கி, 400 ரூபாய் பறித்து சென்றனர்.இது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், காரம்பாக்கம் 1வது தெருவைச் சேர்ந்த சத்திய மூர்த்தி, 29, ஏழுபிடாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், 27, மற்றும் காவேரி நகரைச் சேர்ந்த சுரேஷ், 29, ஆகிய மூவரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், விக்னேஷ் மீது ஏற்கனவே கொலை முயற்சி உட்பட 2 வழக்குகள் உள்ளன.
14-Apr-2025
20-Apr-2025