உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியை காட்டி மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது

கத்தியை காட்டி மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது

எம்.கே.பி.நகர்,:சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர் சந்திப்பு அருகில், மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் அங்கு சென்று சம்பவத்தில் ஈடுபட்ட, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சஞ்சய், 20; வியாசர்பாடி, பி.வி.காலனியை சேர்ந்த முகமது முஸ்தபா, 21; கொடுங்கையூர், சரவணன் நகரை சேர்ந்த சரண், 25 ஆகிய மூவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !