உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் அத்துமீறல் மூன்று வாலிபர்கள் கைது

பெண்ணிடம் அத்துமீறல் மூன்று வாலிபர்கள் கைது

எம்.கே.பி. நகர், திருவள்ளூர் மாவட்டம், அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர், 31 வயது பெண். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.சில மாதங்களுக்கு முன் இவர், கோட்டூர்புரத்தில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்ற போது, வியாசர்பாடி, எம்.கே.பி., நகரைச் சேர்ந்த ஜோதிஸ், 32, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பின், அந்த பெண்ணை காதலிப்பதாக கூறிய ஜோதிஸ், எம்.கே.பி., நகரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து வந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்து ஜோதிஸ் தன் நண்பர்களிடம் கூறியதால், அவர்கள் அந்த பெண்ணை கிண்டல் செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த அப்பெண், புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துகுமாரிடம் புகார் அளித்தார்.இந்த வழக்கு, எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி, வழக்கு பதிவு செய்த போலீசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, வியாசர்பாடியைச் சேர்ந்த ஜோதிஸ், 32, கிண்டல் செய்த அவரது நண்பர்கள் தரணிகுமார், 33, கொடுங்கையூரைச் சேர்ந்த புவனேஸ்வரன், 32, ஆகிய மூன்று பேரையும், நேற்று கைது செய்தனர். விசாரணைக்குப் பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை