இன்று இனிதாக (18.09.2025)
ஆன்மிகம் வியாச விநாயகர் கோவில் மண்டல பூஜை - காலை 9:00 மணி. சிறப்பு அலங்கார, ஆராதனை - மாலை 6:00 மணி. இடம்: கதிர்வேடு. சொற்பொழிவு திருமுறை இசை சொற்பொழிவு: மடிப்பாக்கம் மணி அய்யர்- - மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை. ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், பள்ளிக்கரணை. சத்ய ஞான தரும சாலை வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்ன தானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி. பொது பொம்மை கொலு கண்காட்சி நவராத்திரியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில் பொம்மை கொலு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை. சர்வதேச கருத்தரங்கம் ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லுாரியின் கணித துறை சார்பில் இருநாள் சர்வதேச கருத்தரங்க துவக்க விழா - காலை 9:30 மணி. இடம்: ஓபுல் ரெட்டி அரங்கம், தி.நகர் பேக்கிங் உபகரண கண்காட்சி 'காம்பேக்' சார்பில் பேக்கிங் மெஷினரி, உபகரணங்கள், தளவாடப் பொருட்களின் சிறப்பு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.