உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக 

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் சதுர்த்தியை முன்னிட்டு, நர்த்தன விநாயகர் அபிஷேகம், மாலை 4:30 மணி, கிருத்திகையை முன்னிட்டு, சிங்காரவேலர் திருவீதி உலா, மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர். சிவசுப்ரமணிய சுவாமி கோவில் அபிஷேகம், காலை 6:00 மணி, 1,008 போற்றி அர்ச்சனை, ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: திருநீலகண்டர் கோவில் வளாகம், இ.சி.ஆர்., நீலாங்கரை. அய்யா வைகுண்டர் கோவில் புரட்டாசி மாதம், எட்டாம் நாள் திருவிழாவில், அய்யா சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை - இரவு 7:00 மணி. அய்யா வைகுண்ட பரம்பொருள், குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வருதல் - இரவு 9:30 மணி - மணலிபுதுநகர். சித்தி விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: வேடந்தாங்கல் நகர், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். உபன்யாசம் சிவநாம மஹிமை, நடராஜன் ஷியாம் சுந்தர், மாலை 6:00 மணி. இடம்: அயோத்யா மண்டபம், ஆரியகவுடா சாலை, மேற்கு மாம்பலம். பொது சொற்பொழிவு மதுரத்வனி சார்பாக, மஹாபாரதம் சொற்பொழிவு தொடர், நிகழ்த்துபவர்: முனைவர் சுதா சேஷய்யன், மாலை 6:15 மணி. இடம்: ஆர்.கே., கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர். ஆட்டோ சர்வ் கண்காட்சி ஆட்டோ மோட்டிவ் துறையில் உற்பத்தி மற்றும் சேவைகளில் புதுமை குறித்த மூன்று நாள் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ