உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் வேதவல்லி தாயார் புறப்பாடு - மாலை 5:30 மணி. ஆஸ்தானம் - மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. தெப்ப உத்சவம் நிரஞ்சன மாதவ பெருமாள், பேயாழ்வார் தெப்ப உத்சவம் - மாலை 6:30 மணி. இடம்: மாதவ பெருமாள் கோவில், மயிலாப்பூர். அனந்த பத்மநாப சுவாமி கோவில் உற்சவர் சாந்தி அபிஷேகம், 108 சங்காபிஷேகம் - காலை 9:00 மணி. இடம்: 2வது பிரதான சாலை, காந்தி நகர், அடையாறு. அய்யாவின் அவதார விழா யுகப்படிப்பு - காலை, உச்சிப்படிப்பு, அன்னதானம் - பகல் 12:00 மணி இடம்: பொன்னம்மாள் மெமோரியல் மெட்ரிக் பள்ளி வளாகம், பெரியார் பாதை, சூளைமேடு. தெப்போத்சவம் துவக்கம் மாசி மாத உத்சவத்தை முன்னிட்டு, மூன்று நாள் தெப்ப விழா துவக்கம், மாலை 7:00 மணி. இடம்: தாமோதர பெருமாள் கோவில், வில்லிவாக்கம். பொது ஹோலி கொண்டாட்டம் ரங் ரசியா- - 2026 எனும் பெயரில், மழை நடனம், டி.ஜே., இசையுடன் ஹோலி கொண்டாட்டம் - காலை 9:00 மணி. இடம்: டவர் கிளப், அண்ணா நகர். இலவச யோகா பயிற்சி சத்யானந்தா யோகா மையத்தின் இலவச பயிற்சி - காலை 5:00 மணி. இடம்: வேம்புலி அம்மன் கோவில், மாடம்பாக்கம். திருமால் முருகன் திருமண மண்டபம் கம்ப ராமாயண வகுப்பு - மாலை 5:00 மணி முதல். இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !