பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
சென்னை இந்திய விமானப் படையின், 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள், ஆர்.கே.,சாலைக்கு பதிலாக, வாலாஜா சாலையில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.திருவான்மியூர் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கு வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள், சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல், பாரிமுனையிலிருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள், அண்ணாசாலை - காந்தி மண்டபம் சாலை வழியாக செல்லலாம்.மாநகர பேருந்துகள், அண்ணா சிலையில் இருந்து வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே சந்திப்பு, ஐஸ்ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக செல்லலாம்.கிரீன்வேஸ் பாயின்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி, ஆர்.ஏ.,புரம் இரண்டாவது பிரதான சாலை, டி.டி.கே., சாலை, ஆர்.கே.சாலை, அண்ணாசாலை வழியாக செல்லலாம்.காலை, 7:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.,சாலை, கத்தீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் வணிக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் மேம்பால ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாகன நிறுத்தம்
காமராஜர் சாலை: நீல வண்ண பாஸ் உடையவர்கள், வி.ஐ.பி., - வி.வி.ஐ.பி., கார்கள் கடற்கரை சாலையிலும், மற்றவர்கள் மாநிலக்கல்லுாரி, சுவாமி சிவானந்தா சாலை, லேடி வெலிங்டன் கல்லுாரியிலும் வாகனங்கள் நிறுத்திக் கொள்ளலாம்.சாந்தோம் சாலை: காது கேளாதோர் மற்றும் வாய் பேசதோர் சி.எஸ்.ஐ., பள்ளி, செயின்ட் பெட்ஸ் மேல்நிலைப்பள்ளி, புனித சாந்தோம் பள்ளி, கதீட்ரல் ஆரம்ப பள்ளி, சாந்தோம் சமுதாய நலக்கூடம், லுாப் சாலையில் ஒரு பக்கம், வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.ஆர்.கே.சாலை: கலங்கரை விளக்கம் ரயில் நிலையம், என்.கே.டி.,பள்ளி, குயின் மேரிஸ் கல்லுாரி, புனித எபாஸ் பள்ளியில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். வாலாஜா சாலை: கலைவாணர் அரங்கம், ஓமந்துாரார் மருத்துவ மைதானம், விக்டோரியா விடுதி மைதானத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.அண்ணாசாலை: தீவுத்திடல் மைதானம், பொதுப்பணி துறை மைதானம், மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.வாகன நிறுத்துமிடங்கள் காலை 9:30 மணிக்கு மூடப்படும். எனவே தனியார் வாகனத்தில் நிகழ்ச்சியை காண வருவோர் முன்னதாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.