போக்குவரத்து போலீசார் சல்யூட் அடிக்க தேவையில்லை!
''சென்னையில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களும், தலைமை காவலர்களும், அதிகாரிகள் செல்லும்போது, 'அட்டென்ஷனில்' நின்றால் மட்டும் போதும்; சல்யூட் அடிக்க தேவையில்லை. அவர்கள், தங்கள் பணிகளில் கவனம் செலுத்தினால் போதும். ஆனால், எஸ்.ஐ., அதற்கு மேல் பதவியில் உள்ளவர்கள், மேல் அதிகாரிகள் வரும்போது சல்யூட் செய்துவிட்டு, தங்கள் பணிகளை தொடர வேண்டும்.இந்த உத்தரவு கீழ்நிலையில் உள்ள காவலர்கள் வரை சென்றடைவதை, அந்தந்த ஆய்வாளர்கள் உறுதி செய்யய வேண்டும். உத்தரவை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும். - அருண், சென்னை போலீஸ் கமிஷனர்