உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருநங்கை தற்கொலை

திருநங்கை தற்கொலை

ஓட்டேரி, பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகன் தினேஷ், 24. இவர், 19ம் வயதிலேயே பெங்களூரு சென்று திருநங்கையாக மாறி, பெயரை பிரியங்கா என மாற்றிக் கொண்டார்.கடந்த மாதம், தலைமைச்செயலக காலனியில் நடந்த மயான கொள்ளை திருவிழாவிற்காக சென்னை வந்திருந்தார். மகன் சென்னை வந்ததை அறிந்த சங்கீதா, வீட்டிற்கு அழைத்துள்ளார்.ஆனால் அவர், 'தனக்கு பெங்களூரில் ஒரு லட்ச ரூபாய் கடன் உள்ளது; அதை அடைக்க வேண்டும்' என, பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். அவர்களும் பணம் தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியே இருந்த பிரியங்கா, மின் விசிறியில் துாக்கு மாட்டி இறந்துள்ளார்.ஓட்டேரி போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், பெங்களூரில் உள்ள திருநங்கை அமைப்பைச் சேர்ந்தவர்கள், பிரியங்காவிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டுள்ளனர். அப்பணத்தை பெற்றோரிடம், பிரியங்கா கேட்ட நிலையில், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ