உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.டி.,  ஊழியரிடம் நகை பறிப்பு திருநங்கையருக்கு வலை

ஐ.டி.,  ஊழியரிடம் நகை பறிப்பு திருநங்கையருக்கு வலை

அண்ணா நகர் அண்ணா நகர் 15வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ரோனக், 29; ஐ.டி., ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, அண்ணா நகர் ஏ.எல். பிளாக் வழியாக சென்றார். அப்போது, மொபைல் போனில் அழைப்பு வந்ததால் சாலையிலே நின்று பேசி கொண்டிருந்தார்.அந்நேரம், இருசக்கரத்தில் வந்த அடையாளம் தெரியாத திருநங்கையர் இருவர், ரோனக்கிடம் பேச்சு கொடுத்தனர். பின், கத்திமுனையில் மிரட்டி, அவரது 4 சவரன் செயின் மற்றும் பிரேஸ்லைட்டை பறித்து தப்பினர். இது குறித்து விசாரிக்கும் அண்ணாநகர் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கையரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை