உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தில்லை கங்கா நகர் சுரங்கப்பாலத்தில் கொப்பளிக்கும் கழிவுநீரால் அவதி

தில்லை கங்கா நகர் சுரங்கப்பாலத்தில் கொப்பளிக்கும் கழிவுநீரால் அவதி

வேளச்சேரி, விஜய நகர் மேம்பால ரயில் நிலையத்தையும், ஜி.எஸ்.டி., சாலையையும் இணைக்கும் உள்வட்டச்சாலையில், நங்கநல்லுார், தில்லை கங்கா நகரில் சுரங்கப்பாலம் அமைந்துள்ளது.மாநகர பேருந்துகள் உட்பட ஆயிரக்கணக்கான பேருந்துகள், இந்த சுரங்கப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றன. சுரங்கப்பாலத்தின் பக்கவாட்டு பகுதி மற்றும் கீழ்ப்பகுதிகளில் ஊற்றுநீர் வெளியேறி தேங்குவது வாடிக்கையான ஒன்று.இதைத் தடுக்க, சில ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ரூபாய் செலவில் பக்கவாட்டு சுவர் புனரமைக்கப்பட்டது. இருப்பினும், தண்ணீர் வெளியேறுவது தொடர்கதையானது. இதையடுத்து, மழைக்காலத்தில் தண்ணீரை வெளியேற்ற நிரந்தரமாக மின் மோட்டார் வசதி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், கடந்த பருவமழைக்கு பின் சுரங்கப்பாலத்தில் கழிவு நீருடன் கலந்து, ஆங்காங்கே ஊற்று வெளியேறி வருகிறது. தேங்கும் கழிவு நீரால் பாசி படிந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர்.பாலத்தின் இருபுறமும் பாதாள சாக்கடை உள்ளது. அதில், உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது.சுரங்கப்பாலத்தை பராமரிக்கும் துறை தனி கவனம் செலுத்தி, சுரங்கப்பாலத்தில் கழிவுநீர் வெளியேறுவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.- -நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி