உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஏ.டி.எம்.,மில் நுாதன வழிப்பறி இருவர் கைது

 ஏ.டி.எம்.,மில் நுாதன வழிப்பறி இருவர் கைது

செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் உள்ள ஏ.டி.எம்.,மில், இரு தினங்களுக்கு முன், குருசாமி, 65, என்ற முதியவர், அங்கு நின்ற வாலிபரிடம் பணம் எடுத்து தர உதவி கேட்டார். அந்த நபர், ஏ.டி.எம்., கார்டை வாங்கி இயந்திரத்தில் நுழைத்து, பின் நம்பரை தெரிந்து கொண்டு, பணம் வரவில்லை என கூறி, வேறு ஒரு கார்டை கொடுத்துள்ளார். அடுத்த ஏ.டி.எம்., சென்று பரிசோதித்த முதியவருக்கு, அது போலி ஏ.டி.எம்., கார்டு என தெரிந்தது. அதே ஏ.டி.எம்.,மில் பணம் செலுத்த வந்த டேனியல் என்பவரிடம், 'கூகுள்பே' செயலி வழியாக செலுத்துவதாக கூறி, 1,500 ரூபாயை, அதே நபர்கள் மோசடி செய்துள்ளனர். புகாரின்படி விசாரித்த செம்மஞ்சேரி போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட சுனாமி நகரை சேர்ந்த கவுதம், 29, சதீஷ், 26, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி