உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ. 80 லட்சம் மோசடி இரண்டு பேர் கைது  படம் உண்டு

ரூ. 80 லட்சம் மோசடி இரண்டு பேர் கைது  படம் உண்டு

சாஸ்திரி நகர், தி.நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன், 50. கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த 2023ம் ஆண்டு கிண்டியை சேர்ந்த ஆனந்த், 43, என்பவர் இவருக்கு அறிமுகமானார். இவர், அடையாறில் ஒரு இடம் விற்பனைக்கு உள்ளதாக கூறி, சாஸ்திரி நகரை சேர்ந்த மோகன்தாஸ், 55, என்பவரை, கமலக்கண்ணனிடம் அறிமுகப்படுத்தினார். இரு தரப்பினரும், இடத்திற்கு 90 லட்சம் ரூபாய் விலை பேசி முடித்தனர். பணமாகவும், வங்கி வாயிலாகவும், 80 லட்சம் ரூபாயை கமலக்கண்ணன் கொடுத்துள்ளார். பத்திரப்பதிவு செய்ய கேட்டபோது, கூடுதலாக 70 லட்ச ரூபாய் தந்தால்தான் பத்திரப்பதிவு செய்து தருவேன் என, மோகன் தாஸ் கூறியுள்ளார். இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து தன்னை ஏமாற்றியதாக, கமலக்கண்ணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, சாஸ்திரி நகர் போலீசார், நேற்று, ஆனந்த், மோகன்தாஸ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆனந்த் மீது, ஏற்கனவே அசோக் நகர், ஆதம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் உள்ளன. மோகன்தாஸ் மீது சாஸ்திரி நகர் போலீசில் ஒரு வழக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ