மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற பெண் கைது
15-Jul-2025
சென்னை, மெரினாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கைது செய்த போலீசார், 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மெரினா லுாப் சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், ஆயிரம்விளக்கு காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நரேஷ், 35, சாலிகிராமத்தைச் சேர்ந்த விமல்குமார், 24 என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
15-Jul-2025