உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.1.43 கோடி மோசடி வழக்கு மேலும் இருவர் பிடிபட்டனர்

ரூ.1.43 கோடி மோசடி வழக்கு மேலும் இருவர் பிடிபட்டனர்

சென்னை: அதிக லாபம் ஆசைகாட்டி, 1.43 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். பெருங்குடியைச் சேர்ந்தவர் கார்த்திக், 36. இவர், கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் வந்த 'டிரேடிங்' விளம்பரத்தை பார்த்து, அவற்றில் கொடுக்கப்பட்டிருந்த லிங்குகளை 'கிளிக்' செய்து, 1.43 கோடி முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார். இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், 'அதிக லாபம் ஈட்டலாம்' என ஆசைவார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா ஸ்ரீனிவாஸ், 50, மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி எத்திராஜ், 43 ஆகியோரை, 24ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த அருண் பாண்டியன், 33, அனகாபுத்துாரைச் சேர்ந்த தினேஷ், 29 ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை