உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடைகளில் மாமூல் வசூல் போலீசார் இருவர் இடமாற்றம்

கடைகளில் மாமூல் வசூல் போலீசார் இருவர் இடமாற்றம்

மேடவாக்கம் :தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேடவாக்கம் மேம்பாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சாலையோர கடைகளில் மாமூல் வசூலித்த போலீஸ்காரர்கள் இருவர், கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ், மாலையில் தள்ளுவண்டி உணவுக் கடைகள், பல சிறிய கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைக்காரர்களிடம் போலீசார் தினமும் மாமூல் வசூலிப்பதாக, நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டுகள் வந்தன. அப்பகுதி கடைக்காரர்களிடம், நேற்று இரவு போலீசார் மாமூல் வசூலிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில், சீருடை அணிந்திருந்த இரு போலீஸ்காரர்கள், கடைக்காரர்களிடம் பணத்தை பெற்று, தங்கள் சட்டைப்பையில் வைக்கும் காட்சி பதிவாகியிருந்தது. விசாரணையில், அவர்கள் மேடவாக்கம் காவல் நிலைய ஏட்டு திருமுருகன் மற்றும் போலீஸ்காரர் வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, 'இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி