வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்போ அலி ன்னு சொன்னா குற்றமாமே
மேலும் செய்திகள்
வழிப்பறி செய்த இருவர் கைது
12-Sep-2025
சென்னை: இரவு காட்சி சினிமா பார்த்துவிட்டு, அதிகாலை சாலையில் நடந்து சென்ற ஐ.டி., ஊழியரிடம், கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கையர் இருவரை, போலீசார் கைது செய்தனர். சென்னை, திருநின்றவூரைச் சேர்ந்தவர் ஜெஸ் ஆலன் ரொசாரியா, 24. இவர், எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அரும்பாக்கம் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், கடந்த 10ம் தேதி இரவு, காசி தியேட்டரில் இரவு நேர காட்சியில் சினிமா பார்த்துவிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை, காசி எஸ்டேட் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த திருநங்கையர் இருவர், பணம் கேட்டு உள்ளனர். பணம் இல்லை என, ஜெஸ் ஆலன் ரொசாரியா கூறியதால், கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயின், பணம் அனுப்பும் மொபைல் போன் செயலி வாயிலாக, 300 ரூபாயை பறித்து தப்பினர். புகாரின்படி, எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்து, ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த திருநங்கையரான சாந்தி, 28, சாய்னா, 19, ஆகிய இருவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
இப்போ அலி ன்னு சொன்னா குற்றமாமே
12-Sep-2025