மேலும் செய்திகள்
வீட்டில் இறந்து கிடந்த டிராவல்ஸ் உரிமையாளர்
1 hour(s) ago
ரயிலில் தவறவிட்ட 4 சவரன் செயின் மீட்பு
2 hour(s) ago
முறிந்து விழுந்த மரம்: வாகனங்கள் சேதம்
2 hour(s) ago
சென்னை: முதல்வர் கான்வாய் வாகனங்களுக்கு எதிரே, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் புகுந்ததால் நீலாங்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் விஜய், காலை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து, தலைமை செயலகம் புறப்பட்டார். கான்வாய் வாகனங்கள், கபாலீஸ்வரர் நகரில் இருந்து இ.சி.ஆர்., திரும்பும்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், வேகமாக கபாலீஸ்வரர் நகரில் புகுந்தார். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், வாகனத்தை நிறுத்த முயன்றபோது, 'ஹெல்மெட்' அணியாததால் தன்னை மறிக்கின்றனர் என நினைத்து, வாலிபர் இன்னும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டினார். ஒரு கட்டத்தில் போலீசார் வாலிபரை பிடித்தனர். விசாரணையில், அவர் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரைச் சேர்ந்த 19 வயதானவர் எனவும், தனியார் கல்லுாரியில் படித்து வருவதும் தெரிந்தது. அவர் ஹெல்மெட் அணியாதது, அவரிடம் லைசென்ஸ் இல்லாதது, விதி மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 8,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் வாலிபரின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago