உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வில்லிவாக்கம் மயான பூமி 28 வரை மூடல்

வில்லிவாக்கம் மயான பூமி 28 வரை மூடல்

சென்னை,பராமரிப்பு பணிகள் காரணமாக, வில்லிவாக்கம் மயான பூமி வரும் 28ம் தேதி வரை மூடப்படுகிறது.மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:அண்ணாநகர் மண்டலம், 94வது வார்டுக்கு உட்பட்ட வில்லிவாக்கம் மயான பூமியின் எரிவாயு தகனமேடையில், பழுது சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனால், வரும் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை, தற்காலிகமாக, எரிவாயு தகனமேடை செயல்பாடு நிறுத்தி வைக்கப்படுகிறது.இப்பணிகள் நடைபெறும் நாட்களில், வேலங்காடு, அரும்பாக்கம் எரிவாயு மயான பூமியை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ