அயனாவரத்தில் விதிமீறும் வாகனங்களால் இடையூறு
அயனாவரம்:அண்ணா நகர் மண்டலம், அயனாவரம் பிரதான சாலையில், கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு தலைமை அலுவலகம், ராஜி தெரு, நியூ ஆவடி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளன.அதிக போக்குவரத்து உடைய இச்சாலையை ஆக்கிரமித்து, தனியாருக்கு சொந்தமான வாகனங்கள், ஏராளமாக நிறுத்தப்பட்டு உள்ளன.இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:அயனாவரத்தை சுற்றியுள்ள பல சாலைகளில், போக்குவரத்து இடையூறாக தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.சமீபத்தில் ராஜி தெருவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானபோது, போலீசார் கண்துடைப்புக்கு தடுப்பு அமைத்தனர்.அதேபோல், இ.எஸ்.ஐ., மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.காலை முதல் இரவு வரை பல நாட்களாக ஒரே பகுதியில் சில வாகனங்கள் நிற்கின்றன. இதனால், அப்பகுதியில் எப்போதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அவர்கள் கூறினர்.