ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு
சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் தொகுதி ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பும் இயந்திரங்கள், ஆன்லைன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன. சோழிங்கநல்லுார் தொகுதியில், 703 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 27 பேர் போட்டியிடுவதால், இரண்டு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரம், ஆன்லைன் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்படும். இதற்கான பணி, நேற்று, பொது பார்வையாளர் பிரீத்தி மீனா, தேர்தல் நடத்தும் அலுவலர் திருநாவுக்கரசு முன்னிலையில் நடந்தது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். மொத்தம் 703 ஓட்டுச்சாவடிகளுக்கு, 840 இயந்திரங்கள் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதில், 703 இயந்திரங்கள் ஆன்லைன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன. சின்னம் பொருத்தும் பணி, 16ம் தேதி நடைபெறும் என, தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார்.