உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனைகளில் தண்ணீர் தேங்கி கொசு தொல்லை அதிகரிப்பு

மனைகளில் தண்ணீர் தேங்கி கொசு தொல்லை அதிகரிப்பு

ஆலந்துார்,:ஆலந்துார் மண்டலத்தில் மீனம்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் காலிமனைகள் அதிகம் உள்ளன. தவிர, இப்பகுதிகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழைநீர், காலி மனை மற்றும் வடிகால் பணியிடங்களில் தேங்கியுள்ளது. அதில், கொசுக்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதிகாலை மற்றும் இரவில் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பூச்சி பறப்பது போல, தெருக்களில் கொசுக்கள் வட்டமிடுகின்றன.இதனால், சுகாதார பாதிப்பு ஏற்பட்டு, சிறார் முதல் மூத்த குடிமக்கள் வரை, பல்வேறு வகை காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.எனவே கொசுக்களை கட்டுப்படுத்த, ஆலந்துார் மண்டலம் முழுதும் கொசு மருந்து தெளிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை